dinamalar telegram
Advertisement

ரோடு பணிகளின் போது உடையும் குழாய்களை சரி செய்வது யார் பொறுப்பு: மதுரை ஆய்வு கூட்டத்தில் கேள்வி

Share
மதுரை:''ரோடு பணிகளின் போது குழாய்கள் சேதப்படுத்தப்படுவதால் குடிநீர் வீணாகிறது. உடையும் குழாய்களை சரி செய்வது யார் பொறுப்பு,'' என மதுரையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை,சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் நடந்த ஐந்து மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.

மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.,க்கள்பேசியதாவது:

தளபதி(மதுரை வடக்கு): கோரிப்பாளையம், தெற்குவாசலில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். பழங்காநத்தம் பாலம் அரையாக பாதியில் நிற்கிறது. அதை சரி செய்ய வேண்டும்.

பூமிநாதன் (மதுரை தெற்கு) : கீழவாசல், முனிச்சாலையில் நெரிசலை தவிர்க்க பாலங்கள் அமைக்க வேண்டும்.

மாங்குடி (காரைக்குடி): கிராம ரோடுகளை தரம் உயர்த்த வேண்டும். பள்ளி கட்டடங்களை முறையாக பராமரிக்க வேண்டும். தேவையான பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும்.

தமிழரசி(மானாமதுரை): கன்னார் தெரு - தனுஷ்கோடி ரோட்டை இணைக்க வைகையாற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும். தேவர் சிலை முதல் கிருஷ்ணராஜபுரம் வரை வைகை கரையில் ரோடு அமைக்க வேண்டும். மானாமதுரை தொகுதியில் ஏராளமான கிராம பள்ளிகள் உள்ளன. ஆனால் சுற்றுச்சுவர், போதிய கட்டங்கள் இல்லை.முருகேசன்(பரமக்குடி): பரமக்குடி ஓட்டபாலத்தில் விபத்துக்களை தவிர்க்க தனுஷ்கோடி ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்): திருவாடானையிலிருந்து ராமநாதபுரம் நகருக்குள் செல்லும் ரோட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அரண்மனை அருகே பேவர்பிளாக் ரோடு அமைக்க வேண்டும்.

செந்தில்குமார் (பழநி): பழநி-கொடைக்கானல் ரோட்டை தரம் உயர்த்தி அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்ல முடியும். கொடைக்கானல் - மூணாறு ரோட்டையும் தரம் உயர்த்திட வேண்டும். திண்டுக்கல் ரிங் ரோட்டிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் ரோடு படுமோசமாகவுள்ளது.

காந்திராஜன் (வேடசந்துார்): ரோடு பணிகளின் போது குழாய்கள் சேதப்படுத்தப்படுகிறது. குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து ரோடு போடும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் ஊராட்சி நிர்வாகங்கள் தான் சீரமைக்க வேண்டும் என்கின்றனர். ஊராட்சி நிர்வாகிகள் ரோடு போட்ட ஒப்பந்ததாரர்கள் தான் சீரமைக்க வேண்டும் என்கின்றனர். வேடசந்துாரில் மேம்பாலம் அமைக்க வேண்டும். எரியோட்டில் பராமரிப்பின்றியுள்ள பொதுப்பணித்துறை கட்டடத்தை அகற்றி விட்டு டிராவல்ஸ் பங்களா அமைக்க வேண்டும்.
வெங்கடேசன் (சோழவந்தான்): மன்னாடிமங்கலம் இரும்பாடி ரோட்டில் வைகையாற்றில் பாலம் அமைக்க வேண்டும். இதனால் மக்கள் 14 கி.மீ., சுற்றி செல்வதை தவிர்க்க முடியும். அலங்காநல்லுார் வலசையில் பெரியாறு கால்வாய் பாலத்தை அமைக்க வேண்டும். சிறுமலை அடிவாரத்திலுள்ள விராலிபட்டிக்கு செல்ல ரோடு அமைக்க வேண்டும்.

அமைச்சர் மூர்த்தி: மதுரை புது நத்தம் ரோட்டில் 7.25 கி.மீ., துாரத்திற்கு உயர்மட்ட பாலம் எதற்காக அமைக்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் நகரில் நெரிசலை தவிர்க்க அவுட் போஸ்ட் முதல் கோரிப்பாளையம், தெற்குவாசல் வழியாக விமான நிலையத்திற்கு பாலம் அமைத்தால் பயணிகள் எளிதில் செல்ல முடியும்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல மலைபகுதியில் ஏழு கி.மீ.,துாரத்திற்கு ரோடு போட வேண்டும்.அமைச்சர் சக்ரபாணி: ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரம், பல்லடம் செல்லும் ரோட்டை தரம் உயர்த்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும். வேடசந்துாரில் கட்டாயம் பாலம் அமைக்க வேண்டும். ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் பழநியிலுள்ள டிரால்ஸ் பங்களாவை அகற்றி விட்டு புதிததாக கட்ட வேண்டும்.

இக்கேள்விகளுக்கு அமைச்சர் வேலு, தலைமை பொறியாளர்கள் சந்திரசேகர், கீதா, பாலமுருகன், முருகேசன் பதிலளித்தனர்.மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், கலெக்டர்கள் விசாகன் (திண்டுக்கல்), சந்திரகலா(ராமநாதபுரம்), மதுசூதன்ரெட்டி (சிவகங்கை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விசாகனுக்கு பாராட்டுஅமைச்சர் வேலு பேசுகையில், ''ரோட்டோரங்களில் மரங்களை நட வேண்டும். அப்போது தான் மழை கிடைக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் விசாகன், ராஜமுந்திரி போன்ற பகுதிகளிலிருந்து ஐந்து லட்சம் மரக்கன்றுகள் வரை பெற்று நட நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதுபோல மற்ற கலெக்டர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என பாராட்டினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement