dinamalar telegram
Advertisement

மதுரை காமராஜ் பல்கலையில் புதிய துணைவேந்தர் தேர்வு குழு: மூபா வலியுறுத்தல்

Share
மதுரை:'மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு அமைக்க வேண்டும்' என பல்கலை பேராசிரியர்கள் சங்கம் (மூபா) வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய துணைவேந்தர் கிருஷ்ணனின் பதவிக்காலம் 2022, ஜன.,1ல் முடிகிறது. பல்கலை விதிப்படி புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக் குழு அமைக்கும் பணி ஜூலை 1ல் துவங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் பதிவாளர் வசந்தாவுக்கு 'மூபா' தலைவர் புவனேஸ்வரன், பொதுச்செயலாளர் சதாசிவம், பொருளாளர் பாலசுப்பிரணியம் அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளதாவது:ப ல்கலை விதிப்படி துணைவேந்தர் பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் புதிய துணைவேந்தர் தேர்வுக் குழு அமைக்கும் பணியை துவங்க வேண்டும்.

தாமதிக்காமல் அறிவிப்பு வெளியிட்டு தேர்வுக் குழுவில் இடம் பெறும் சிண்டிகேட் மற்றும் செனட் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் பணியை துவக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள் நடவடிக்கை முடிந்து புதிய துணைவேந்தர் பதவிக்கான தகுதியுள்ள மூவர் பட்டியலை கவர்னரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பல்கலையில் 2022, ஜன.,யில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்க அனைத்து நடவடிக்கைகளும் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement