dinamalar telegram
Advertisement

அரசு பஸ் ஓட்டுனர்களுக்கு 60 வேண்டாம்; 58 போதும்: ஹெச்.எம்.எஸ்., வலியுறுத்தல்

Share
மதுரை:அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 வேண்டாம் 58 போதுமானது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஹெச்.எம்.எஸ்., தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க ஆலோசகர் அங்குசாமி தெரிவித்துள்ளதாவது: மாநில அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியுள்ளது. இந்த முடிவு அரசு பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு சரியாக வராது. இவர்கள் 24 மணிநேரமும் பஸ்களை இயக்க வேண்டும் என்பதால் 50 வயதுக்கு மேல் சோர்வு ஏற்பட்டுவிடும்.

இதனால் ஏற்கெனவே இருந்த 58 வயது முடிவுறுவதற்குள் பலர் விருப்ப ஓய்வில் செல்லும் மனநிலையில் இருந்தனர். இந்நிலையில் ஓய்வு வயது 60 ஆக இருந்தால் விபத்துக்களை தவிர்க்கும் தன்மை குறைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    ஓட்டுனர்கள் ஓய்வு பெற்றாலும் வேறு இடத்தில வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது .

Advertisement