dinamalar telegram
Advertisement

மதுரை எய்ம்ஸ் வழக்கு தள்ளுபடி

Share
மதுரை:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி துவங்க தாமதம் ஏற்படுவதால் மத்திய, மாநில அரசுகள் மீது நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015 ல் அறிவித்தது. கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு வெளியிட உத்தரவிட உயர்நீதிமன்றத்தில் 2018 ல் மனு செய்தேன். 2018 டிச.,6 ல் மத்திய சுகாதாரத்துறை,'கேபினட் ஒப்புதல் கிடைத்தபின் எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவங்கி 45 மாதங்களில் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்,'என அறிக்கை சமர்ப்பித்தது.

இதை பதிவு செய்த நீதிபதிகள் பைசல் செய்தனர்.மதுரையில் எய்ம்ஸ் என்பது வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது. சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மேல்நடவடிக்கை இல்லை. நீதிமன்றத்திற்கு தவறான தகவல் மற்றும் உத்தரவாதம் அளித்த மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள், எய்ம்ஸ் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் குறிப்பிட்டார்.
இது விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்ய நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன் பட்டியலிடப்பட்டது. நீதிபதிகள், 'இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறோம்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    தள்ளுபடி செய்தால் போதாது. அந்த நபருக்கு அபராதம் விதித்திருக்க வேண்டும்

Advertisement