dinamalar telegram
Advertisement

ரூ.2.9 லட்சம் நகை கடன் மோசடி கூட்டுறவு செயலாளர்கள் கைது

Share
மதுரை:மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இ.கோட்டைப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு சொசைட்டி உள்ளது.

இங்கு 2014-15ல் செயலாளராக இருந்தவர்கள் சுப்பையா 63, குணசேகரன் 46. இங்கு அடகு வைத்த நகைகளை மீட்கும் பயனாளிகள் செலுத்திய தொகையை சொசைட்டி கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்தனர். இதற்கு அங்கு விற்பனையாளராக இருந்த ராமசாமியும் உடந்தையாக இருந்தார்.

சொசைட்டியின் வரவுசெலவுகளை தணிக்கை செய்தபோது ரூ.2.9 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. உசிலம்பட்டி துணை பதிவாளர் மதி புகாரில், மூவர் மீதும் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., பாண்டிசெல்வம் வழக்குப்பதிவு செய்தார். சுப்பையா, குணசேகரன் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களுக்கு முன் ராமசாமி இறந்துவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    வழக்கு போடுவது வழக்கம். ஒன்றும் பலனில்லை. இதுவரை எனது கூட்டுறவு ஊழியராவது தண்டனை பெற்றார்களா. நாமக்கல் மாவட்டத்தில் கைதான பல ஊழியர்கள் ஜாமீனில் வந்து கடை வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக வழக்கு நடப்பதாக சொல்கிறார்கள். இப்படி செய்வது எல்லாமே கண்துடைப்பு

Advertisement