dinamalar telegram
Advertisement

ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை தேவை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Share
மதுரை:''இஸ்ரேலின் பெகாசஸ் உளவு செயலியை பயன்படுத்தி அலைபேசி ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய மத்திய அரசு முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவதாக கருதப் படுவோர் நடமாட்டம், அலைபேசி உள்ளிட்ட சாதனங்களை உளவுத்துறையினர் கண்காணிப்பது பல்லாண்டு காலமாக இருக்க கூடிய ஒன்று தான். தற்போது வெளியாகியுள்ள பெகாசஸ் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உளவு செயலியாகும்.

இதுபோன்ற செயலிகளை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவது வேறு. அரசியல் ரீதியாக செயல்படும் எதிர்கட்சி, கூட்டணி கட்சி தலைவர்களின் அலைபேசிகளை உளவுபார்க்க பயன்படுத்துவது பேராபத்தானது. இஸ்ரேலின் உளவு செயலி மூலம் இந்திய தலைவர்களை உளவு பார்க்க அனுமதித்தது சட்டவிரோதம். இதை விலைகொடுத்து வாங்கியது யார், பயன்படுத்த அனுமதித்தது யார் என மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும், என கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    அரசியல்வாதிகளே பயங்கரவாதிகளுக்கு துணை போவதால் ஒட்டு கேட்பது தவறில்லை,. மடியில் கனமில்லாவிட்டால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அரசு செய்திருந்தால் பாராட்டப்பட வேண்டிய விஷயம் . தேச துரோகிகளுக்கு துணை போகின்றவர்கள் தான் இதை எதிர்ப்பார்கள்.

Advertisement