dinamalar telegram
Advertisement

பயன்பாட்டிற்கு வராத பாலம்

Share
வாடிப்பட்டி : மதுரை பரவை - -துவரிமான் இடையே வைகை ஆற்றில் ரூ.16.13 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

ஒன்றரை ஆண்டுகளாகியும் பரவை பகுதியில் பாலத்திற்கானஇணைப்பு சாலை அமைக்கப்படாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.பரவை பா.ஜ., மண்டல் தலைவர் ரமேஷ் கண்ணன்: இணைப்பு சாலைக்கு வீடுகள் இடிபடாமல் கோயில் மற்றும் பட்டா நிலங்கள் வழியாக மாற்றுபாதையை நெடுஞ்சாலைத்துறை தேர்வு செய்தும் பணிகள் துவங்கவில்லை. சாலை அமைக்க வலியுறுத்தி பா.ஜ., உண்ணாவிரத போராட்டம் நடத்தும், என்றார்.

நெடுஞ்சாலைத்துறை திட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பன்: மாவட்ட நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தி தந்தால் பணிகளை துவங்குவோம், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement