dinamalar telegram
Advertisement

பெரியாறு அணையில் மழை

Share
தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 14 மி.மீ., பெரியாறில் 11 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1315 கன அடியாக இருந்தது.

தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 900 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4756 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 130.25 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நேற்று பகல் முழுவதும் நீர்பிடிப்பில் மழை பெய்ததால் நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்பட்டுள்ள நீரின் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 81 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement