dinamalar telegram
Advertisement

தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பு

Share
Tamil News
ராமேஸ்வரம்:தனுஷ்கோடியில் வீசும் சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.

தென்மேற்கு பருவ காற்று தீவிரமடைந்து கடந்த இரு நாட்களாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் 35 கி. மீ., வேகத்தில் சூறாவளி வீசுகிறது. இதனால் மன்னார் வளைகுடா கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள பாலம் மீது ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக மோதி, 20 அடி உயரத்திற்கு மேலே எழுந்தது.கடலோரத்தில் மணல் புயல் வீசுவதால், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement