dinamalar telegram
Advertisement

அனைத்து மதத்தினருக்கும் பொது சட்டம் கோரி மனு

Share
புதுடில்லி : நாடு முழுதும் அனைத்து மதங்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு ஒரே சட்டம் இயற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:முஸ்லிம், கிறிஸ்துவர், பார்சிக்கள் ஆகியோர் தங்கள் வழிபாட்டு தலங்களை உருவாக்கி பராமரிக்கும் உரிமைகளை பெற்றுஉள்ளனர்.

அரசியல் சாசன சட்டம்



ஆனால் ஹிந்து, ஜைனம், புத்தம் மற்றும் சீக்கியர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் வழிபாட்டு தலங்களை உருவாக்கி, பராமரிக்கும் உரிமையை வழங்கும் அரசியல் சாசன சட்டம் 26வது பிரிவுக்கு எதிரானது.

நாட்டில் உள்ள ஒன்பது லட்சம் கோவில்களில், நான்கு லட்சம் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் ஒரு தேவாலயம் அல்லது மசூதி கூட, அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தேவாலயம் மற்றும் மசூதி நிர்வாகங்கள் புரியும் தொண்டுகளுக்கு வரி வசூலிப்பது இல்லை. அதே சமயம், ஹிந்து கோவில்கள், அவற்றின் வருவாய்க்கும், தொண்டு பணிகளுக்கும் 13 - 18 சதவீதம் வரி
செலுத்துகின்றன. இந்த பாகுபாடிற்கு 1951ம் ஆண்டின் ஹிந்து அறநிலையச் சட்டமும், அதுபோல மேலும் பல சட்டங்களை அவ்வப்போது மாநில அரசுகள் இயற்றியது தான்
காரணம். இந்த சட்டங்கள் காரணமாக, 15 மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கோவில்கள் மற்றும் கோவில் சொத்துக்கள் உள்ளன.

விதிமுறை



எனவே முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு உள்ள உரிமை போல, ஹிந்து மதத்தினருக்கும், அரசின் தலையீடின்றி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கவும், பராமரிக்கவும் உரிமை வழங்க வேண்டும்.இது தொடர்பாக தற்போது உள்ள சட்டங்கள் பாரபட்சமாக உள்ளன. எனவே அனைத்து மதங்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு பொதுவான விதிமுறைகளுடன் சட்டம் இயற்ற, மத்திய அரசு அல்லது சட்ட ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (23)

  • vivek c mani - Mumbai,இந்தியா

    மிகவும் அவசியமான சட்டம் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் பாரத கலாச்சாரத்தை பாதுகாக்கவும்..

  • raja - Cotonou,பெனின்

    ஆஸ்திரேலியாவின் சட்டங்களை மதிக்க விரும்பாத, அதன்படி நடக்க விரும்பாத முஸ்லிம்கள் தங்களுக்கு பிடித்த நாடுக்கு போகலாமுன்னு ஒரு பெண் பிரதமர் கூறியிருக்கும் துணிவு இங்கு உள்ள பிரதமருக்கும் வரவேண்டும்....

  • yavarum kelir - yadhum vore ,இந்தியா

    அப்படியே வெளிநாட்டுலயிருந்து திருட்டுத்தனமா ஊடுருவி வந்து நம்ம ஆஸ்பத்திரியில பிள்ளை பெத்து அதுகளுக்கு இந்திய குடியுரிமை வாங்குகிற ஒரு மார்கத்துக்கும் சட்டம் கொண்டு வந்த நல்ல இருக்கும் எஜமான்.

  • Suresh Kumar - Salem,இந்தியா

    இந்த பொது சட்டம் உடனடித்தேவை. மனு கொடுத்தவருக்கு வாழ்த்துக்கள்.

  • ஆரூர் ரங் -

    ஐரோப்பா அமெரிக்க நாடுகளில் ஒரே👍 சிவில் சட்டம்தான். அங்கும் அதனை மாற்று மதத்தினர் ஏற்றுக் கொண்டு🙏 வாழ்கின்றனர். கோவாவில் கூட 60 ஆண்டாக ஒரேசிவில் சட்டம்தான். இங்கு மட்டும் ஏன் எதிர்ப்பு? போலி👹 மதசார்பின்மை பிழைப்புக் கட்சிகள் தரும் ஊக்கம் மட்டுமே காரணம்.

Advertisement