dinamalar telegram
Advertisement

சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்

Share
தேவகோட்டை:அடங்கல் சான்றிதழ் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கோபிகண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா சண்முகநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் அனுபவித்து வந்த இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. மேலச்செம்பொன்மாரி குரூப் வி.ஏ.ஓ., கோபிக்கண்ணனிடம் அடங்கல், புலப்படம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
சில நாட்கள் அலைந்த நிலையில் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்தில் பாண்டி லஞ்சமாக ரூ.500ஐ கோபிக்கண்ணிடம் கொடுப்பதும் அவர் அதை வாங்கி சட்டை பையில் வைப்பதும் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டு வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. இதையடுத்து கோபிகண்ணனை சஸ்பென்ட் செய்து ஆட்சியர் பிரபாகரன் உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement