dinamalar telegram
Advertisement

ஒட்டு கேட்பு விவகாரம் கிருஷ்ணசாமி கோரிக்கை

Share
மதுரை:'போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய, மத்திய அரசு முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படுவோர் நடமாட்டம், போன் உள்ளிட்ட சாதனங்களை உளவுத்துறையினர் கண்காணிப்பது பல்லாண்டு காலமாக இருக்கக் கூடிய ஒன்று தான்.தற்போது வெளியாகி உள்ள பெகாசஸ், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உளவு செயலியாகும். இதுபோன்ற செயலிகளை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவது வேறு. அரசியல் ரீதியாக செயல்படும் எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி தலைவர்களின் போன்களை உளவு பார்க்க பயன்படுத்துவது பேராபத்தானது.

இஸ்ரேலின் உளவு செயலி மூலம் இந்திய தலைவர்களை உளவு பார்க்க அனுமதித்தது சட்டவிரோதம். இதை விலை கொடுத்து வாங்கியது யார், பயன்படுத்த அனுமதித்தது யார் என மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement