dinamalar telegram
Advertisement

மாநகராட்சி உதவி கமிஷனரை மீண்டும் பணியமர்த்த கோரிக்கை

Share
மதுரை : மதுரைக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வருகையை முன்னிட்டு ரோடுகளை சீரமைக்க சுற்றறிக்கை அனுப்பியதால், பணியில்இருந்து விடுவிக்கப்பட்ட உதவி கமிஷனர் சண்முகத்தை, மீண்டும் பணியமர்த்த பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மதுரை பால்பாண்டி தலைமை செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'இசட்' பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் வருகைக்காக வழக்கமாக மேற்கொள்ளும் ரோடு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்ய உதவி கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.எம்.பி. சு.வெங்கடேசன் கமிஷனரை மிரட்டி, உதவி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார்.

நியாயமான காரணமில்லாமல் உதவி கமிஷனரை காத்திருப்போர் பட்டியலில்வைத்த மாநகராட்சி கமிஷனரை மாற்றி, உதவி கமிஷனரை அதே பணியில் அமர்த்த வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement