dinamalar telegram
Advertisement

பெகாசஸ் மென்பொருளை வாங்க அனுமதித்தது யார்:காங்., செய்தி தொடர்பாளர் சசிகாந்த்

Share
Tamil News
பழநி:'மத்திய அரசு 'பெகாசஸ் ஹேக்கிங்' குறித்த முழு விசாரணைக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மாநில காங்., செய்தி தொடர்பாளர் சசிகாந்த் செந்தில் வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது:இந்திய அரசியல் தலைவர்கள் உட்பட முக்கியமானவர்களின் 300க்கும் மேற்பட்ட அலைபேசிகள் இஸ்ரேல் நாட்டு மென்பொருள் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டது.இதுகுறித்து கேள்வி எழுப்பினால் மழுப்பலாகபதிலளிக்கின்றனர்.

இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.அந்த மென்பொருள் அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. இந்த மென்பொருளை இந்தியாவில் யார் வாங்கியதுஎன பிரதமர் விளக்க வேண்டும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement