dinamalar telegram
Advertisement

பளியன்குடியில் யானைகளால் அச்சம்

Share
Tamil News
கூடலுார்:தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பளியன்குடி அருகே யானைகள் பகலிலேயே முகாம்இட்டுள்ளதால் பழங்குடியின மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
லோயர்கேம்ப் வனப்பகுதி பளியன்குடியில் 47 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு யானைகள் வராமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட அகழி முழுவதும் சேதமடைந்துள்ளது. இரவில்அதிகமாக இக்குடியிருப்பைச் சுற்றிலும் யானைகள் வருவதால் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று பகலில் 2 யானைகள், 3 குட்டிகளுடன் குடியிருப்பு பகுதியில் உலா வந்தன. இதனால் அகழியை சீரமைக்க வனத்துறை முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement