dinamalar telegram
Advertisement

மந்த கதியில் ஆர்.ஆர்., நகர் பாலம் பணி; மாதக்கணக்கில் தொடரும் ஒற்றைபாதை பயணம்

Share
விருதுநகர் : ஆர்.ஆர்.,நகர் நான்குவழிச்சாலை மேம்பாலம் பணி மந்த கதியில் நடப்பதால் மாதக்கணக்கில் தொடரும் ஒற்றைபாதை பயணத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

2020ல் ஏற்பட்ட கனமழையில் ஆர்.ஆர்.,நகர் மேம் பாலம் பக்க வாட்டு சுவர் இடிந்தது. ஐந்தாவது முறையாக தொடரும் பாலம் உடைப்பால் தரமாக சீரமைக்க மத்திய குழு நேரடியாக ஆய்வு செய்தது. ஆய்வுக்கு பிறகு நான்கு மாதங்கள் கழித்து இதன் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டது. ஏப்ரல் முதல் துவங்கிய சீரமைப்பு பணிகள் தற்போது வரை முடிந்த பாடில்லை.

அமெரிக்க தொழில்நுட்பமான இன்டர்லாக் சிஸ்டம் முறையில் பணிகள் நடப்பதால் தாமதம் ஆவதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஜூலை 15க்குள் பணிகள் முடியும் என நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில் ஜூலை இறுதியை நெருங்கியும் பாலம் செயல்பாட்டிற்கு வரவில்லை.

இதனால் நான்குவழிச்சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே எதிரும் புதிருமாக ஒற்றைப்பாதையில் வாகனங்கள் சென்று வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டமேலாளர் மதிவாணன்: ஒரு மாதத்திற்குள் பாலம் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement