dinamalar telegram
Advertisement

திறந்த நிலை போய் சாக்கு மூடைகள் நூதனமாக நடக்குது மணல் கடத்தல்

Share
காரியாபட்டி : காரியாபட்டி ,நரிக்குடி பகுதிகளில் லாரிகளில் திறந்த நிலையில் மணல் கடத்தப்பட்ட நிலையில், தற்போது நுாதன முறையில் சாக்கு மூடைகளில் மணல் கடத்துவது தொடர்கிறது.

குண்டாறு, தெற்காறு , கிருதுமால் நதியில் நிறைந்திருந்த மணல் திட்டுகள் திருடப்பட்டதால்,தற்போது ஆறுகளில் சீமைக்கருவேலங்கள் அடர்ந்து ஆறுகள் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் போயின. நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆற்று ஓரங்களில் இருந்த பட்டா நிலங்களில் உள்ள மணல்களையும் விட்டு வைக்கவில்லை திருட்டு கும்பல். விளைவு விவசாய நிலங்களும் வீணடிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள் முறையிடும்போது திருட்டு தடுக்க கடுமையாக நடந்துகொள்ளும் அதிகாரிகள் , அதன் பின் கண்டும் காணாமல் விடுவதும் வாடிக்கையாக உள்ளதால் மணல் திருட்டும் தொடர்கிறது.

பகிரங்கமாக லாரிகளில் திறந்த நிலையில் மணல் எடுத்து சென்றால் மாட்டிக்கொள்வோம் என்பதை அறிந்த கும்பல், தற்போது நுாதன முறையில் மினி வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சாக்கு மூடைகளில் திருட்டு மணலை எடுத்து விற்பனை செய்கின்றனர். இதனை கண்டறிந்து இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார், வருவாய் அதிகாரிகள் முன் வர வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement