dinamalar telegram
Advertisement

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி பிரதமருக்கு வேண்டுகோள்

Share
மதுரை:'பள்ளிகள் திறப்பதற்கு முன், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்' என பிரதமர் மோடிக்கு, சி.பி.எஸ்.இ., ஸ்கூல்ஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் எனும் சி.எஸ்.எம்.ஏ., வலியுறுத்தி உள்ளது.பிரதமருக்கு சி.எஸ்.எம்.ஏ., தலைவர் மனோகரன், செயலர் அசோக் சங்கர், பொருளாளர் சத்தியநாராயணன் அனுப்பிய கடிதம்:

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பள்ளிகளை திறக்க முடிவு எடுக்க வேண்டும். 'வரும் ஆக., முடிவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கலாம்' என, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆர்., அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு முன், முன்னுரிமை அடிப்படையில் 100 சதவீதம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தும் திட்டம் இருந்தால் கிராமப்புற, பழங்குடி மலைவாழ் மற்றும் பொருளாதார ரீதியில் வருவாய் பாதித்த குடும்ப மாணவர்கள் நிலை குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.மத்திய அரசின் முடிவுகள், மாநில கொரோனா தடுப்பு விதிமுறை அடிப்படையில் இருத்தல் வேண்டும்.

தலா நான்கு வார இடைவெளியில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை முதல் கட்டமாகவும், ஆறு -- எட்டு, ஒன்று - ஐந்து மற்றும் கே.ஜி., வகுப்புகள் என அடுத்தடுத்த கட்டமாக திறக்க பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement