dinamalar telegram
Advertisement

தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பெயர் மாற்றத்திற்கு எதிராக வழக்கு

Share
மதுரை : மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் என பெயர் மாற்றத்திற்கு பதிலாக பழமையான பெயரான வண்டியூர் மாரியம்மன் கோயில் என குறிப்பிட தாக்கலானவழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

வண்டியூர் துரைப்பாண்டியன் தாக்கல் செய்த மனு: வண்டியூர் மாரியம்மன்கோயில் பழமையானது. கோயில் நுழைவு வாயில் பெயர் பலகையில் 'தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்' என குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று பெயரான வண்டியூர் நீக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையில் மாற்றம் செய்து, வண்டியூர் மாரியம்மன் கோயில் என இடம்பெற அரசு பரிசீலிக்க உத்தரவிட 2019ல் மனு செய்தேன்.நீதிபதிகள், 'பழமையான ஆவணங்களை மதுரை மாநகராட்சி கமிஷனர் பரிசீலித்து சரியான பெயரை உறுதி செய்ய வேண்டும்,' என்றனர்.

கமிஷனர், 'மாநகராட்சி ஆவணங்களில் மாரியம்மன் கோயில் என உள்ளது,' என பதில் அனுப்பினார். அவர் சரியாக பரிசீலிக்கவில்லை. அரசின் சுற்றுலாத்துறை பட்டியல் மற்றும் அரசின் இணையதளங்களில் வண்டியூர் மாரியம்மன் கோயில் என உள்ளது. மாநகராட்சி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பழமையான பெயரான வண்டியூர் மாரியம்மன் கோயில் என பெயர் பலகை வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை தரப்பு,'ஆவணங்களில் வண்டியூர் என குறிப்பிடவில்லை. மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல,' என தெரிவித்தது.நீதிபதிகள் அறநிலையத்துறை செயலாளர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement