dinamalar telegram
Advertisement

புதையல் எடுப்பதாக மோசடி: மூவர் கைது

Share
திருச்சி:புதையல் எடுப்பதாக கூறி ஏமாற்றிய ஜோதிடர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், விளாமுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி பிரபு, 39. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, நிலம் உள்ளிட்ட உடமைகளை விற்று வறுமையில் வாடினார். இதையடுத்து, நண்பர் ஆலோசனைப்படி, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற ஜோதிடரை சந்தித்துள்ளார்.சில நாட்களுக்கு முன், பிரபு வீட்டை வந்து பார்த்த ஜோதிடர், 'உன் வீட்டில் புதையல் உள்ளது. அதை எடுக்க பூஜை செய்ய, 50 ஆயிரம் ரூபாய் செலவாகும்' என தெரிவித்து, 5,000 ரூபாய் முன்தொகை பெற்றார்.

நேற்று முன்தினம், தன் நண்பர்களான வெள்ளியங்கிரி, 39; பிரபாகர், 40 ஆகியோருடன் பிரபு வீட்டுக்கு வந்து குழி தோண்டினர். 12 அடி ஆழத்துக்கு குழி தோண்டியும் புதையல் கிடைக்காததால், குழி தோண்டும் பணியை நிறுத்தும்படி பிரபு சொல்லியிருக்கிறார்.அதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி, 'பேசியபடி 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்; இல்லையெனில் வாய் பேசமுடியாதபடி செய்து விடுவேன்' என மிரட்டியுள்ளார். பிரபு, பெரம்பலுார் போலீசில் புகார் செய்தார். ஜோதிடர் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement