dinamalar telegram
Advertisement

தடகள போட்டியில் சாதிக்கும் மாற்றுத்திறனாளி

Share
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கத்தாளம்பட்டியை சேர்ந்தவர் பார்வையற்ற மாற்று திறனாளி தினேஷ் 21. கபடி, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளில் அசத்தி வரும் இவர் பல்வேறு தடகள போட்டிகளில் வென்று பதக்கங்களை குவித்துள்ளார். கல்லுாரியில் படிக்கும் போது மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று ஓட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

தென்னிந்திய அளவிலான 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், 200 மீட்டர் ஓட்டத்தில் 2ம் இடம், 100 மீட்டர் ஓட்டத்தில் 3ம் இடம் பெற்று சாதித்துள்ளார்.தினேஷ் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கான பராலிம்பிக் போட்டியில் பங்கேற்க கடுமையான பயிற்சி செய்து வருகிறேன். நிச்சயமாக அதில் பங்கேற்று என் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பேன். தன்னம்பிக்கையோடு விளையாட்டில் ஈடுபட்டால் விளையாட்டு துறையில் பிரகாசிக்க முடியும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement