Load Image
dinamalar telegram
Advertisement

வர்த்தக மைய கட்டடம் இடம் ஆய்வு

திருமங்கலம் : உச்சபட்டி சேட்டிலைட் சிட்டி பகுதியில் மடீட்சியா சார்பில் 80 ஆயிரத்து 120 சதுர அடி பரப்பளவில் வர்த்தக மைய கட்டடம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.


டான்சியா தலைவர் அன்புராஜன், மடீட்சியா தலைவர் முருகானந்தம், செயலாளர் முருகன், பொருளாளர் மணிமாறன், கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாதராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடிசை மாற்று வாரியம் சார்பில் உச்சபட்டியில் ரூ. 60.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 672 தொகுப்பு வீடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.


குடிசை மாற்று வாரிய பொறியாளர் முனியசாமி, உதவி நிர்வாக பொறியாளர் ரவிஅம்பேத்கார், உதவி பொறியாளர் ராஜாராம் கலந்து கொண்டனர். குடியிருப்புகள் அடுத்தாண்டு ஆண்டு ஏப்.,க்குள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement