dinamalar telegram
Advertisement

சரிந்த பள்ளி கூரை; சிதைந்த கிணறு; ஸ்ரீவி., ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

Share
ஸ்ரீவில்லிபுத்தூர் : இந்திரா நகர் ஊராட்சி பள்ளி கூரை இடிந்தும், அண்ணா நகரில் கிணறு சேதமடைந்து உள்ளதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் கூறினர்.இவ்ஒன்றிய கூட்டம் தலைவர் மல்லி ஆறுமுகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராஜேஸ்வரி, பி.டி.ஓ.,ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்:

மாரிமுத்து (அ.ம.மு.க.,): நக்கமங்கலம்- அச்சங்குளம் ரோடு மோசமாக உள்ளது. ஒராண்டாகியும் நடவடிக்கை இல்லை.தலைவர்: விரைவில் ரோடு அமைக்கப்படும்.

ஜெயமணி முருகன் (அ.தி.மு.க.,): இந்திரா நகர் ஊராட்சி பள்ளி கூரை இடிந்து காணப்படுகிறது. அண்ணா நகரில் கிணறு சேதமடைந்து கொசு தொல்லை, சுகாதாரக்கேடு உள்ளது.தலைவர்: பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கந்தலட்சுமி (தி.மு.க.,): படிக்காசுவைத்தான் பட்டி ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் வேண்டும்.

தலைவர்: ஒவ்வொரு கவுன்சிலரும் வார்டுகளில் சேதமடைந்த சாக்கடைகள், குடிநீர் தொட்டிகள் குறித்த எழுதி கொடுத்தால் சரிசெய்யப்படும். ரோடு, பாலம் போன்ற பணிகள் நிதி வந்ததும் செய்யப்படும். படிக்காசு வைத்தான் பட்டியில் அரசு நிலம் கண்டறிந்து ரேஷன் கடை கட்டித்தரப்படும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement