dinamalar telegram
Advertisement

பெட்ரோல் தரம் அறிய ஆட்டோமேஷன் கருவி

Share
Tamil News
திருப்பூர்:பெட்ரோல், 'பங்க்'கில் நிரப்பும் எரிபொருளின் தரம், அளவு, விலை உள்ளிட்ட விபரங்களை சரி பார்த்து கொள்ளும் வகையில், திருப்பூரில், 'ஆட்டோமேஷன்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பெட்ரோல் பங்குகளில், அளவு மற்றும் தரம் மீது வாகன உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படுவது வாடிக்கை.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம், தன் விற்பனை நிலையங்களில் நவீன ஆட்டோமேஷன் கருவியை பொருத்திஉள்ளது. திருப்பூர் மாவட்ட இந்தியன் ஆயில் நிறுவன விற்பனை மேலாளர் ராகுல் கூறியதாவது:டேங்க் கொள்ளளவு, இருப்பில் உள்ள பெட்ரோல் தரம் என அனைத்து விபரங்களையும் இந்த திரையில் காண முடியும்.

விலை மற்றும் விற்பனை அளவு, விற்பனை செய்த நேரத்துடன் கூடிய பில்கள் பெறலாம். ஆயில் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களிலும், 'சாப்ட்வேர்' இணைக்கப்பட்டு உள்ளது.இதனால், எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். டேங்கில் கலப்படம் அல்லது பம்ப் அளவில் ஏதேனும் முறைகேடு செய்தாலும், உடனடியாக பம்ப், 'லாக்' ஆகி விடும். இதனால் எரிபொருளின் தரம், அளவு, விலை என எந்த இடத்திலும் தவறு ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement