dinamalar telegram
Advertisement

ஊட்டியில் பலத்த காற்றுடன் கன மழை நீடிப்பு: தேயிலை தொழில், காய்கறி தோட்டம் பாதிப்பு

Share
ஊட்டி: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், காற்றுடன் மழை பெய்து வருகிறது; ஏழு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், இரு வாரங்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல், மழை தீவிரம் அடைந்துள்ளது. ஊட்டி, எமரால்டு, முத்தோரை, பைக்காரா, பிங்கர்போஸ்ட், நடுவட்டம், கிளன்மார்கன் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

12 செ.மீ., மழைஇதனால் கேரளா, கர்நாடக மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மரங்களை அகற்றினர். நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சியில் அதிகபட்சம் 12 செ.மீ., மழை பதிவானது. அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குந்தா அணைக்கு விநாடிக்கு 300 கன அடி, கெத்தைக்கு 350 கன அடி தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. அணை பாதுகாப்பு கருதி, உபரி நீரை வெளியேற்ற மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''இரண்டு நாட்களாக மழை அதிகரித்துள்ளது. வருவாய் துறை உட்பட அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 456 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

நீலகிரி மாவட்டம் குன்னுாரில், கடும் மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.

போக்குவரத்து மாற்றம்பல இடங்கள் சேறும், சகதியுமாக உள்ளன. மழையின்போது வாகனங்களை ஓட்டி செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, நந்தகோபால் பாலம் அருகே, சேற்றில் லாரி சிக்கி பழுதடைந்து நடுரோட்டில் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேறு வாகனங்களும் சேற்றில் சிக்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஊட்டி, குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும், கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின், போக்குவரத்து சீரானது.

காய்கறி தோட்டம் மூழ்கியதுஊட்டி அருகே, குருத்துகுளி நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீரோடை ஆக்கிரமிப்பு காரணமாக, மழை வெள்ளம் மலை காய்கறி தோட்டத்தில் புகுந்தது.முத்தோரை, பாலாடா, கல்லக்கொரை ஹாடா, மணலாடா பகுதிகளில், மழை வெள்ளம் புகுந்ததில், 500 ஏக்கர் தோட்டம் மூழ்கியது. பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன.


கூடலுாரில் வாழை தோட்டத்தில் வெள்ளம் புகுந்ததால், 10 ஏக்கர் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டன. இரு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குருத்துகுளி நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீரோடை வழித்தட ஆக்கிரமிப்பு காரணமாக, மழை வெள்ளம் மலை காய்கறி தோட்டத்தில் புகுந்தது. கோழி கரை, எம். பாலாடா, கல்லக் கொரை ஹாடா, மணலாடா பகுதிகளில் பயிரிட்ட பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறி தோட்டத்தில் வெள்ள நீர் புகுந்ததில், 500 ஏக்கர் அளவு மலை காய்கறி தோட்டம் பாதிக்கப்பட்டது. எம். பாலாடா பஜார் பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. முத்தோரை பாலாடா பஜார் பகுதியில், சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. கிண்ணக்கொரை, கோரகுந்தா, பைன்சோலை, சோலுார் சந்திப்பு பகுதிகளில், நேற்றிரவு அடுத்தடுத்து மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேயிலை தொழில் பாதிப்புகூடலுார், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் எஸ்டேடுகள் தவிர, சிறு விவசாயிகளும் பசுந்தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர் மழை, கொப்புள நோய் பாதிப்பு காரணமாக, பசுந்தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடரும் மழையினால் தொழிலாளர்கள், பசுந்தேயிலை பறிக்க சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள, 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மற்றும் தனியார் தொழில்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தடுப்பு சுவர் இடிந்து மண் சரிவுபந்தலுார் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. ஹட்டி சாலையில் குரியன் என்பவரது வீட்டின் முன்பக்கம் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் அடியோடு பெயர்ந்து விழுந்தது. இதன் கீழ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை மீது மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்த வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement