dinamalar telegram
Advertisement

குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வுக்கு அமைச்சர் உத்தரவு

Share
தேனி : தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு பங்களிப்பு செலுத்தும் பயனாளிகளை தேர்வு செய்ய ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில் வடவீரநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் 2579 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு மானியம் ரூ.1.50 லட்சம், மாநில அரசு மானியம் ரூ.6 லட்சத்துடன் பயனாளிகள் பங்களிப்புடன் வீடு வழங்கப்படுகிறது. ஆக்கிரமிப்பில் வசித்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகளிடம் விண்ணப்பம் கோரியதில் 25,000 பேர் மனு செய்தனர்.

ஆய்வு: இந்நிலையில் தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பணிகளை அமைச்சர் அன்பரசன், தொழில்ஆணையர் சிஜிதாமஸ், கலெக்டர் முரளிதரன், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் ஆய்வு செய்தனர். 'குடிசை மாற்று வாரிய வீடுகளை பெற பயனாளிகள் பங்களிப்பு செலுத்த தகுதியானவர்களை தேர்வு செய்யவும், பழங்குடியினருக்கு பங்களிப்பு தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை அல்லது வங்கி கடன் மூலம் பெற நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார். முன்னதாக தேனி தொழில் பேட்டையில் தொழில் முனைவோருடன் ஆலோசனை செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement