dinamalar telegram
Advertisement

இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

Share
தேவதானப்பட்டி : வைகைஅணை பிரிவு ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ரமேஷ்கண்ணன் 19, என்பவரை இன்ஸ்பெக்டர் முத்துமணி அடித்ததாக கூறி தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை அவரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நீலமேகம் மகன் ரமேஷ்கண்ணன். நேற்று மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வைகைஅணை பிரிவு ஆட்டோ ஸ்டாண்டில் எருமலைநாயக்கன்பட்டி செல்வதற்கு நின்று கொண்டிருந்தார்.அந்தப்பகுதியில் ரோந்து சென்ற தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துமணி, ரமேஷ்கண்ணனிடம் ஏன் இங்கு நிற்கிறாய் எனக்கேட்டுள்ளார்.

அப்போது அவர் அடித்ததாகக்கூறி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ரமேஷ்கண்ணன் அனுமதிக்கபட்டார். இதனை கண்டித்து அவரின் உறவினர்கள், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., முத்துக்குமார் கூறியதால் கலைந்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement