dinamalar telegram
Advertisement

1.70 லட்சம் மலர் நாற்று நடவு பணி துவக்கம்

Share
Tamil News
குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக, 1.70 லட்சம் மலர் நாற்று நடவு பணி, கொட்டும் மழையில் துவங்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஆண்டு தோறும், செப்., அக்., மாதங்களில் இரண்டாவது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும். நடப்பாண்டின் இரண்டாம் சீசனுக்காக, 1.70 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு பணி நேற்று துவங்கியது.குன்னுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் பபிதா துவக்கி வைத்தார். தோட்டகலை பணியாளர்கள், ஊழியர்கள் சமூக இடைவெளியுடன், கொட்டும் மழையில் நாற்றுகளை நடவு செய்து வருகின்றனர்.

இதில், பிரஞ்சு மேரிகோல்டு, பால்சம், டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஆஸ்டர், கேலண்டுலா, பிகோனியா, லில்லியம், அமராந்தஸ் உட்பட, 75க்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன. செப்., அக்., மாதங்களில், 2வது சீசனில் பூங்கா திறந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement