dinamalar telegram
Advertisement

மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Share
திண்டுக்கல் : 'மோட்டார் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்' என, திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மாநகராட்சி 48 வார்டுகளில் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம், காவிரியில் இருந்து தண்ணீர் பெற்று தினமும் வினியோகிக்கப்படுகிறது. மழையின்மையால் ஆத்துார் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. காவிரி தண்ணீர் கிடைப்பதால் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படுகிறது.

இதில் சிலர் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுவதால் மற்றவர்களின் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி பொறியாளர்கள் நகர் முழுவதும் சோதனையிட்டனர். கடந்த 3 நாட்களில் குடிநீரை உறிஞ்சிய 17 வீடுகளில் இருந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்துள்ளனர். மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சுவது தெரிய வந்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், என எச்சரித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement