dinamalar telegram
Advertisement

பள்ளிகளில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு

Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளிகள் வாயிலாக 'நீட்' தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 13 ம் தேதி துவங்கி ஆக.6 வரை நடக்கிறது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in ல் பதிவு செய்யலாம். ஜூலை 19 ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து மருத்து படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆர்வமுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். சில மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தவறு செய்கின்றனர். இதை தவிர்க்க மாணவர்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement