dinamalar telegram
Advertisement

வருஷநாடு வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு

Share
கடமலைக்குண்டு : வருஷநாடு வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு 50க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து குன்னுார் வழியாக வைகை அணையில் சேர்கிறது. வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உட்பட அனைத்து கிராமங்களின் சாக்கடை கழிவுநீர் வைகை ஆற்றில் சேர்வதுடன் பல இடங்களில் குப்பை கொட்டும் இடமாக்கி வருகின்றனர். எந்த ஊரிலும் குடிநீர் சுத்திகரிப்பு வசதி இல்லை. இதனால் ஆற்றில் வரும் மாசுபட்ட நீரை மக்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்த நீரால் தொற்று நோய்களுக்கான வாய்ப்பும் உள்ளது. சாக்கடை கழிவுநீர், குப்பை வைகை ஆற்றில் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement