dinamalar telegram
Advertisement

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Share
திண்டுக்கல் : திண்டுக்கல் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் 32வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் ஆளுனர்கள் ஜெயக்கண், ஆனந்தஜோதி (தேர்வு) பங்கேற்றனர்.

புதிய தலைவர் ஜெயராஜ், செயலாளர் நாகராஜன் பொறுப்பேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், உதவி ஆளுனர் ச.பாண்டியன் வாழ்த்தி பேசினர். கொரோனா காலத்தில் சிறப்பாக முன்களப்பணியில் ஈடுபட்ட டாக்டர் கருப்பசாமி பிரகாஷூக்கு பரிசு வழங்கினர். மாற்றுத் திறனாளிகள், முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவியாக ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. ரத்ததானம், சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர், ஜி.டி.டி., அட்டை வெளியிடப்பட்டது. நாகராஜன் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement