dinamalar telegram
Advertisement

மன்னார் கடல் பாதுகாப்பு கடற்படை துணை தளபதி ஆய்வு

Share
Tamil News
ராமேஸ்வரம்:மன்னார் வளைகுடா கடலில் பாதுகாப்பு பணி குறித்து இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதுார்சிங் ஆய்வு செய்தார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்ற அவர்மன்னார் வளைகுடா கடலில் ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கடற்படை அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார். பின் ஐ.என்.எஸ்., பருந்து விமான தளத்திற்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினார்.இப்பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு பணி, நடுக்கடலில் மீனவர்கள் மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினார். பின் குந்துகாலில் உள்ள கடற்படையின் ரோந்து படகுகளை ஆய்வு செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement