dinamalar telegram
Advertisement

ஏலத்தோட்டங்களில் செடிகள் மழை,சூறைக்காற்றால் சேதம்

Share
கம்பம் : கேரளா இடுக்கி ஏலத்தோட்டங்களில் கனமழை பெய்து, சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதனால் நிழல்தரும் மரங்கள் ஒடிந்து விழுந்து செடிகளை சேதப்படுத்தி வருகிறது.

இடுக்கி மாவட்டத்தில் வண்டன்மேடு, பத்துமுறி, மாதவன்கானல், சங்குண்டான், புத்தடி, மாலி, சாஸ்தாநடை, சுல்தானியா உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து, சூறைக்காற்றும் வீசி வருகிறது. ஏலத்தோட்டங்களில் உள்ள நிழல் தரும் மரங்கள் ஒடிந்து விழுந்து ஏலச்செடிகளை சேதப்படுத்தி வருகிறது. பல தோட்டங்களில் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய மழையால் ஏலச்செடிகளில் அழுகல் நோய் தாக்கும் சூழல் எழுந்துள்ளதாக விவசாயிகள்தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement