dinamalar telegram
Advertisement

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? களம் இறங்குவார்களா அதிகாரிகள்

Share
உத்தமபாளையம் தாலுகாவில் கண்மாய்கள், குளங்கள் விவசாய ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. மலையடிவாரங்களில் உள்ள நுாற்றுக்கணக்கான ஓடைகள், நீர்வரத்து வழித்தடங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, கம்பம், கூடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதேநிலை தான் உள்ளது.

உத்தமபாளையத்திலிருந்து கோம்பை செல்லும் ரோட்டில் உள்ள ஓடை கருக்கோடையிலிருந்து உத்தமபாளையம் வரைமுழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் கட்டி பயன்படுத்துகின்றனர்.

மாயம்:

அனுமந்தன்பட்டி நீதிமன்றம் அருகில் ஓடை இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது. புதுப்பட்டியிலிருந்து கம்பம் செல்லும் ரோட்டில் கோசேந்திர ஓடை, ஊத்துக்காடு ஓடை முழுக்க ஆக்கிரமிப்பில் உள்ளது. தேனிமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோலத்தான் உள்ளது. இதனால் தண்ணீருக்கு வழியின்றி பாசனத்திற்கு பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டால், தங்களின் கட்டுப்பாட்டில் அந்த ஓடை, கண்மாய், குளம் வரவில்லை என்ற 'ரெடிமேட்' பதிலையே தருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்த்து விவசாயிகளின் நலன்கருதி ஒருங்கிணைந்து செயல்பட்டு நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து அகற்றி நீர்தேக்கி விவசாயம் செழிக்க, நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement