dinamalar telegram
Advertisement

திணறல்! சர்வர் பிரச்னையால் பள்ளிகள்.. சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியாமல்..

Share
திண்டுக்கல் : சர்வர் பிரச்னையால் திண்டுக்கல்லில் 12 ம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பள்ளிகளில் திணறினர்.

கொரோனாவால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மதிப்பெண் வழங்க கமிட்டி அமைத்து, ஜூலை 19 ல் மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 212 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 122 பேர் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். நேற்று (ஜூலை 22) முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என கல்வித்துறை அறிவித்தது.


இதையடுத்து பள்ளிகள் வாயிலாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து, சரிபார்த்து வினியோகிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக நேற்று காலை முதலே மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய ஆயத்தமாகினர். ஆனால் சர்வர் பிரச்னையால் மாலை 3:00 மணி வரை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பள்ளிகளில் அலுவலர்கள் திணறினர். இரண்டு நாட்களுக்குள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து, ஜூலை 26 முதல் மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement