dinamalar telegram
Advertisement

கந்து வட்டி கேட்டு மிரட்டல் விஷம் குடித்த தம்பதி

Share
சிவகாசி:சிவகாசியில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததால் சின்னமாரியப்பன் 60 , சுப்புலட்சுமி 55 தம்பதி விஷம் குடித்தனர்.

சிவகாசி எம்.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். பெட்டிக் கடை நடத்தி வந்த இவர் சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த பின் வெளியூர் சென்று விட்டார். அவருக்கு பணம் கொடுத்த அதே ஊரை சேர்ந்த மாரிக்காளை, வேல்முருகன், சின்னக்காளை, ஜெயபாண்டி, முத்துராஜ், ஆழ்வார், வீரபாபு மற்றும் சிலர், ராஜகோபால் மனைவி விநாயகலட்சுமி 34, தந்தை சின்னமாரியப்பன், தாய் சுப்புலட்சுமி ஆகியோரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மனமுடைந்த வயதான தம்பதியினர் விஷம் குடித்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பாபு பிரசாந்த் டி.எஸ்.பி., கூறுகையில் இந்தவழக்கில் ஒரு சிலர் பிடிபட்டுள்ளனர். தப்பிய மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். கந்து வட்டி குறித்து புகார் கொடுத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement