dinamalar telegram
Advertisement

அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்கள்; பராமரிப்பு அலுவலகம் அமைக்கப்படுமா

Share
கம்பம் : அடிக்கடி உடையும் குடிநீர் மெயின்பகிர்மான குழாய்களை விரைந்து சீரமைக்க கம்பத்தில் குடிநீர்வாரிய வடிகால் வாரிய பராமரிப்பு பிரிவு அலுவலகம் அமைக்க வேண்டும்.

கம்பம் பள்ளத்தாக்கில் லோயர்கேம்பில் இருந்து குடிநீர் பம்பிங் செய்து பெரும்பாலான ஊர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, எல்லப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் முல்லைப்பெரியாற்றில் பம்பிங் செய்து பல ஊர்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் உள்ளன. குறைந்தது 100 கி.மீ., துார மெயின் பகிர்மான குழாய் கம்பம் பகுதியில் மட்டும் வாரியத்தின் பராமரிப்பில் உள்ளது.

கோடையில் அடிக்கடி உடைந்த நிலையில் தற்போது ஆண்டு முழுவதும் மெயின்பகிர்மான குழாய் உடைந்து வருகிறது. ஒரு வாரமாக கம்பம் மெயின்ரோட்டில் அரசமரம் அருகில் கே.பி.டி., திட்ட குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வருகிறது. எனவே கம்பத்தில் குடிநீர் வடிகால்வாரிய பராமரிப்பு பிரிவு அலுவலகம் துவக்க வேண்டும். இதனால் குழாய் உடைப்பு உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு தண்ணீர் வீணாவது தடுக்கப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement