dinamalar telegram
Advertisement

சாலையோர உணவகம் நடத்துவோருக்கு பயிற்சி

Share
திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் சாலையோர உணவகங்களில் சுகாதாரமான உணவு வழங்க வேண்டும்' என, பரிக் ஷான் நிறுவன பயிற்சியாளர் விவேகானந்தன் வலியுறுத்தினார்.

உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான பயிற்சி வகுப்பில் அலுவலர்கள் செல்வம், சந்திரமோகன் தலைமை வகித்தனர்.பரிக் ஷான் நிறுவன பயிற்சியாளர் பேசியது: வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவது விற்பனையாளர்கள் கடமை. கடைக்கு பதிவுச் சான்று, விற்பனை உரிமம் பெற வேண்டும். சுகாதாரமான உணவு தயாரிப்பதை உறுதி செய்ய பயிற்சி சான்றிதழ் அவசியம்.தற்போது அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

தலையில் தொப்பி, கடை பெயருடன் சட்டை அணிய வேண்டும். வாடிக்கையாளர்கள் அருந்த சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். தரமான பொருட்களையே உணவு தயாரிக்க உபயோகிக்க வேண்டும். செயற்கை சுவையூட்டிகள், வண்ணங்கள், பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது. இவ்வாறு பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement