dinamalar telegram
Advertisement

சிவகாசியில் கொத்தடிமைகள் 14 பேர் மீட்பு

Share
Tamil News
சிவகாசி:சிவகாசி பாலிபேக் தயாரிப்பு நிறுவனத்தில்கொத்தடிமைகளாக பணி புரிந்த பீகார், ஒடிசா, சட்டீஸ்கரை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

சிவகாசி வெற்றிலையூரணியில் பாலிபேக் நிறுவனம் உள்ளது.எண்ணை,பால் பாக்கெட் வைக்க பாலிபேக்குகள்தயாரிக்கப்படுகிறது. இங்கு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக பணி புரிவதாக சென்னை ஆதிவாசி கவுன்சிலுக்கு புகார் வந்தது. அங்கிருந்து விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டிக்கு தகவல் அனுப்பப்பட்டது.

சிவகாசி சப் கலெக்டர் பிரதிவிராஜ் தலைமையில் அதிகாரிகள் பாலி பேக் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.கொத்தடிமைகளாக பணி புரிந்த 14 பேரையும் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். பணியமர்த்திய நிறுவனங்களும் சீல் வைக்கப்பட்டது. இவர்களை பணியில் சேர்த்த பீகாரை சேர்ந்த ஏஜென்ட் நவீன்குமாரிடம்45, டவுன் போலீசார்விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement