dinamalar telegram
Advertisement

பயன்பாட்டிற்கு வராத ஒருங்கிணைந்த அலுவலக வளாகம்

Share
மூணாறு : கேரளா மூணாறு அருகே தேவிகுளத்தில் தாலுகா அளவிலான அனைத்து அலுவலகங்களை ஒரே இடத்தில் செயல்படும் வகையில் கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா கண்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

அங்கு தாலுகா,கிராம நிர்வாகம், பொது வினியோகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்,சர்வே உட்பட தாலுகா அளவிலான பல்வேறு அரசு அலுவலகங்கள் வெவ்வேறு பகுதிகளில் தனித்தனி கட்டடங்களில் செயல்படுகின்றன.அவை அனைத்தும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் தேவிகுளத்தில் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா 2016 ஏப்.,3ல் நடந்தது.

அங்கு மூணாறு சிறப்பு வருவாய்த்துறை அலுவலகம் மட்டும் சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது. மற்றவை காட்சிப்பொருளாக உள்ளன. புதிய கட்டடத்தில் அனைத்து அலுவலகங்களையும் மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அரசு நிதி வீணடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.-------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement