dinamalar telegram
Advertisement

மாற்றுத்திறனாளிக்கு சலுகை கோரி வழக்கு

Share
மதுரை:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநித்யா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் மாற்றுத் திறனாளி. சட்டப்படிப்பு முடித்துள்ளேன். சிவில் நீதிபதியாவது என் லட்சியம். எதிர்காலத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் முன் அனுபவ நிபந்தனைகளில் தளர்வு அளிக்கக் கோரி தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி, 'இவ்விவகாரம் உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவின் பரிசீலனையில் உள்ளது.'விரைவில் தகுந்த முடிவெடுக்கும். மனுவை பைசல் செய்கிறோம்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    மாற்று திறனாளி சட்டம் படித்தது பாராட்டுக்குரியது. அதற்காக எல்லாவற்றிலும் சலுகை கேட்பது சரியல்ல.

Advertisement