dinamalar telegram
Advertisement

நூலகம் இல்லை; சுகாதார வளாகம் கட்ட தாமதம்; சிரமத்தில் அரண்மனைப்புதூர் ஊராட்சி 3வது வார்டு மக்கள்

Share
தேனி : ''முழுமையாக சீரமைக்கப்படாத பள்ளங்களால் போக்குவரத்திற்கு இடையூறு, கொசுக்கடியால் நோய் பரவும் அச்சம், கிளை நுாலகம் இல்லை , மகளிர் சுகாதார வளாகம் கட்ட தாமதம் போன்ற பல்வேறு குறைபாடுகளால் தேனி அருகே அரண்மனைப்புதுார் ஊராட்சி 3வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த வார்டில் காளியம்மன் கோயில் பிரதான தெரு, கிழக்குத்தெரு, அதன் குறுக்குத் தெருக்கள், முல்லையாற்றுப் படித்துறை பகுதி, அரண்மனைப்புதுார் - -கொடுவிலார்பட்டி மெயின் ரோடு பகுதிகள் உள்ளன. தெருக்களில் குடிநீர் இணைப்புக்காக பகிர்மான குழாய் பதிக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்த நிலையில் முழுமையாக சீரமைக்கப்படாததால் ஆட்டோ, டூவீலர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.மக்கள் கூறுவது என்ன:

சீரமைக்க வேண்டும்

சவுந்தரம்மாள், காளியம்மன் கோயில் தெரு: முல்லையாற்றுப் படித்துறை நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. பெண்கள் குளிக்கும்போது சிலர் அலைபேசியில் வீடியோ எடுப்பது தொடர்கிறது. இதில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி சார்பில் படித்துறையை சீரமைத்து படிக்கட்டுகள் கட்டித்தர வேண்டும். மகளிர் சுகாதார வளாகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட் நிலையில் பணிகள் துவங்கவில்லை. அதனை விரைவுபடுத்த வேண்டும்.

நுாலகம் தேவை

முருகன், கிழக்குத்தெரு: நீரோடைகளில் தேங்கும் கழிவுநீர் அடைப்புக்களை சுகாதாரப் பணியாளர்கள் எடுப்பது இல்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எங்கள் பகுதியில் இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராக நுாலகம் இன்றி தவிக்கின்றனர். மற்றவர்களும் நாளிதழ், வார இதழ்களை படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கிளை நுாலகம் அமைக்க கலெக்டர், மாவட்ட நுாலக அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement