dinamalar telegram
Advertisement

ஆக., 6ல் துவங்குகிறது பிளஸ் 2 துணைத் தேர்வு

Share
சென்னை:பிளஸ் 2 துணைத் தேர்வு, ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கும் என்றும்; அந்த தேர்வுக்கு, இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான துணைத்தேர்வு, அடுத்த மாதம் 6ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கும். பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டில், குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதாக கருதும் மாணவர்கள், இந்த தேர்வில் பங்கேற்கலாம்.

கடந்த மே மாதம், பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்களும், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.அவர்கள், இன்று முதல், வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், 'தட்கல்' சிறப்பு அனுமதி கட்டணமான, 1,000 ரூபாய் செலுத்தி, 28ம் தேதி விண்ணப்பிக்கலாம்.

அரசு தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தேர்வுக்கான விபரங்கள் அனைத்தையும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement