dinamalar telegram
Advertisement

கொத்தவரைக்காய்க்கு ஊடுபயிராக அகத்தி கீரை

Share
போடி : போடியில் நலிவடைந்த விவசாயிகள் தற்போது பருத்தி, தக்காளி, கொத்தவரைக்காய்க்கு ஊடு பயிராகவும், உரத்திற்காகவும் அகத்தி கீரை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போடி பகுதியில் சோளம், கம்பு, கத்தரி, பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுவந்தனர். உரிய காலங்களில் மழை பெய்யாததால் விளைச்சல் மற்றும் விலை இல்லாமல் போனது. பலர் செய்த முதலீட்டை எடுக்க முடியவில்லை.போடி அருகே டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம்,சில்லமரத்துப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம்ஏக்கரில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

வெயில் காலங்களில் பருத்திக்கும், மழைக்காலங்களில் தக்காளிக்கும் பாதிப்பு ஏற்படுவதால் சீசன் முடியும் நிலையில் வருமானத்திற்காக ஊடு பயிராக அகத்தி கீரைகளை நடவு செய்து வருகின்றனர். ஆறு அடி அளவிற்கு அகத்தி நன்கு வளர்ந்த பின் வெட்டி மண்ணின் அடியில் புதைத்து உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.இதனால் பருத்தி, தக்காளி, கொத்தவரைக்காய் நன்கு வளர்ந்து அதிகம் பலன் தருவதாக தெரிவிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement