dinamalar telegram
Advertisement

ஒளிப்பதிவு சட்டம்: அண்ணாமலை நற்சான்று

Share
சென்னை:'ஒளிப்பதிவு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், திரைத்துறை வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:மத்திய அரசு ஏற்கனவே இருந்து வரும் ஒளிப்பதிவு சட்டத்தில், சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

திரையிட வாய்ப்புண்டு



முதலில், ஒரு திரைப்படம் நாட்டின் பாதுகாப்பிற்கோ, இறையாண்மைக்கோ, ஒருமைப்பாட்டிற்கோ மற்றும் சட்டம் ஒழுங்கிற்கோ பாதகம் ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த படம் திரையிட்டு பார்க்கப்படும்.அதில், பொது அமைதிக்கு ஊருவிளைவிப்பது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே, தணிக்கை சான்று பெற்றிருந்தாலும் கூட, மத்திய அரசு திரும்ப பெற முடியும். குறிப்பிட்ட பகுதி கள் திருத்தப்பட்ட பின், மீண்டும் திரையிட வாய்ப்புண்டு.

இரண்டாவது, ஒரு படைப்பாளியின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல், அதை பிரதி எடுக்கவோ, காட்சிப்படுத்தவோ, எத்தகைய வகையிலும் ஒளிபரப்பு செய்யவோ கூடாது. தமிழ் திரையுலகையும், தமிழக மக்களையும் பிரிக்க முடியாது.தமிழ் திரையுலகின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இந்திய அளவில் புகழ்பெற்று விளங்குவது, நமக்கு பெருமை அளிக்கிறது. அவர்களுக்கு எந்த ஒரு குறை என்றாலும், தமிழக பா.ஜ., ஆதரவாக செயல்பட தயார்.

பாதுகாப்பு



எனவே, ஒளிப்பதிவு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், திரைத்துறையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் என, நம்புகிறேன்.இதுகுறித்து, எந்தவித கருத்துக்களையும் பரிமாறி கொள்ள தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement