dinamalar telegram
Advertisement

மத நல்லிணக்கத்திற்கு பங்கம்; பாதிரியார் மீது நடவடிக்கை பாயும்

Share
Tamil News
தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் முதல் ஆய்வு கூட்டம், சென்னையில், நடந்தது. ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானங்கள்:

*சிறுபான்மையினருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்

*உண்மையான சிறுபான்மை கல்வி நிறுவனங்களை முறையாக வகைப்படுத்தி, சிறுபான்மை மக்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்

* மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வகைப்படுத்தலை, மதம் மாறிய கிறிஸ்துவ வன்னியர்களுக்கும் வழங்க வேண்டும்

*அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி படிப்பில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை, 10 சதவீதமாக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்

* வழிபடும் உரிமை அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்பதால், முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள், தங்கள் சொந்த இடங்களில், விதிகளுக்கு உட்பட்டு, வழிபாட்டு கூட்டங்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

கூட்டம் முடிந்த பின், பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டி:கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பேசிய பேச்சு, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    தூக்கத்திலிருந்து யாரோ எழுப்பிவிட்டார்கள்.

  • Venkata Krishnan - Toronto ,கனடா

    முதலில் "தேவையானவற்றை"செய்துவிட்டு அப்புறம் நடவடிக்கை எடுக்கப்படும்

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    பாரத ரத்னாவை அவமதிக்க வேண்டாம் . பதவி கொடுத்ததற்கு நன்றிக்கடனாக உளறுகிறார் தலைவர். அந்த பாதிரியை கண்டித்து அறிக்கை யாராவது கொடுத்தார்கலா ? வெட்கக்கேடு

Advertisement