dinamalar telegram
Advertisement

அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி

Share
சென்னை:சட்டசபையில் கருணாநிதி படத்தை, ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், கடந்த வாரம் டில்லி சென்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது, 'சென்னை மாகாண சட்டசபை இயங்க துவங்கி, 100 ஆண்டுகளாவதை ஒட்டி நடக்க உள்ள, நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும். சட்டசபையில் கருணாநிதி படத்தை திறந்து வைக்க வேண்டும். 'மதுரையில் அமைய உள்ள கருணாநிதி பெயரிலான நுாலகம், சென்னையில் பல்நோக்கு மருத்துவமனை, சட்டசபை நுாற்றாண்டு விழா நினைவு துாண் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும்' எனக்கூறி, அழைப்பு விடுத்தார்.

அதை ஜனாதிபதி ஏற்றார். ஆனால், விழா தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. அதேநேரம் நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லுாரி, ராணுவ வீரர்கள் பயிற்சி மையம் சார்பில் நடக்கும் கொடி ஏற்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆக., 1ல் ஜனாதிபதி தமிழகம் வர உள்ளதாகவும், மூன்று நாட்கள் தமிழகத்தில் தங்கியிருப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, அப்போது கருணாநிதி படம் திறப்பு மற்றும் மற்ற விழாக்களும் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டசபையில் கருணாநிதி படத்தை, எங்கு வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடந்துள்ளது. சட்டசபையில் ஏற்கனவே, 15 தலைவர்களின் உருவப்படங்கள் உள்ளன. கருணாநிதி படம், 16வது படமாக திறக்கப்பட உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement