dinamalar telegram
Advertisement

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் பதிவிறக்கம்

Share
Tamil News
சென்னை:பிளஸ் 2 மாணவ - மாணவியர், தங்கள் மதிப்பெண் பட்டியலை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு பிளஸ் 2 செய்முறை தேர்வில், 30 மதிப்பெண்; பிளஸ் 1 பொதுத் தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களில், 20 சதவீதம்.பத்தாம் வகுப்பில் அதிகபட்ச மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரி மதிப்பெண்களில், 50 சதவீதம் சேர்த்து, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவரும் பெற்ற மதிப்பெண் விபரம், 19ம் தேதி வெளியிடப்பட்டது.மதிப்பெண் பட்டியல், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியானது. அதை மாணவ - மாணவியர் பதிவிறக்கம் செய்தனர்.பள்ளிகளில் ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியலை, மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement