dinamalar telegram
Advertisement

கால்நடை மருத்துவக்கல்லூரி: கட்டுமானப்பணிகள் ஆய்வு

Share
உடுமலை:உடுமலை அடுத்த பண்ணைக்கிணறு கிராமத்தில், 255.87 கோடி மதிப்பில், புதிதாக கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு, 80 இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. முதற்கட்ட பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார். அப்போது, ஆய்வக வசதியுடன் கூடிய பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் நிலையம், தொழில்நுட்ப துறைக்கான கட்டடங்கள், தொகுப்பு பயிற்சி அறைகள், தங்கும் விடுதி, கால்நடை பண்ணை, மருத்துவமனை கட்டடங்கள் என, பல்வேறு கட்டுமானப் பணிகளின் திட்டங்கள் மற்றும் அதன் வடிவமைப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினர். கலெக்டர் வினீத், வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement